குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் கீழ், அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லால்கஞ்ச் பகுதியில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார்.
நாடு பிரிவினையால் மத அடிப்படையில் நீண்ட காலமாக அகதிகளாக வாழ்ந்து பாதிக்கப்பட்டவர்ளையும் காங்கிரஸ் புறக்கணித்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதன்போது, காங்கிரஸ{ம், சமாஜ்வாதி கட்சியும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்ற பெயரில் பொய்களைப் பரப்பி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயல்வதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், யார் என்ன செய்தாலும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை யாராலும் அகற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்க்கட்சியினர் நாட்டை பிரிவினை வாதம் என்னும் தீயில் தள்ள முயற்சி செய்து வருவதாகவும் இந்திய பிரதமர் நரேந்திரமோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.