நாடாளவிய ரீதியில் ஆந்திராவில் பா.ஜ.க கூட்டணி வெற்றியடையும் என்று சமூக ஊடகங்களில் போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் தற்போதய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சிக்கும், முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவிவருகின்றது.
இதேவேளை பா.ஜ.க மற்றும் பவன் கல்யான் தலைமையிலான ஜனசேனா ஆகிய கட்சிகளும் சந்திரபாபு நாயுடு கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையிலேயே குறித்த போலி கருத்து கணிப்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸாரின் விசாரணையில் குறித்த கருத்துக் கணிப்பானது 2019 இல் வெளியிடப்பட்ட பழைய கிராபிஸ் படம் என்றும் தற்போது நடைபெற்றுவரும் பொதுதேர்தலை முன்னிட்டு சிலரால் திட்டமிட்டு பகிரப்பட்டுள்ளமையும் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.