ஈழத்தமிழர்களின் தன்னாட்சி மற்றும் சுயநிர்ணய உரிமைகள் தொடர்பான சர்வஜனவாக்கெடுப்பு மற்றும் ஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை அங்கீகரிக்கவேண்டும் என கோரும் தீர்மானம் அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அதனை வரவேற்றுள்ளனர்.
இந்த நிகழ்வு அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் இடம்பெற்றது.
தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் உரையாற்றியிருந்தனர்.
அத்துடன் அமெரிக்காவை சேர்ந்த 100க்கும் அதிகமான தமிழர்களும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15ஆவது வருடத்தினை நினைவேந்தி வருகின்ற நிலையில் இந்த தீர்மானம் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த கோரிக்கையினை சனப்பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் வில்லே நிக்கல் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பித்திருந்தார்.
இ;ந்த தீர்மானம் சுதந்திரத்திற்கான சர்வஜனவாக்கெடுப்பை முன்வைப்பதாகவும் இவ்வாறான அணுகுமுறை உலகின் பல பகுதிகளில் பின்பற்றப்பட்டுள்ளதாக சனப்பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் வில்லே நிக்கல் சுட்டிக்காட்டியிருந்தார்.
தங்களால் இதனை செய்ய முடியும் என்றும் தமிழர்களின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிப்பதற்கு தமது பூரணமான ஒத்துழைப்பை வழங்குவதாக வில்லே நிக்கல் உறுதியளித்துள்ளார்.
தமிழர்களிற்கு எதிரான அநீதி உலகில் நீதி;க்கான அச்சுறுத்தல் என குறிப்பிட்ட அவர் 2009ஆண்டு அது இனப்படுகொலைக்கு இட்டுச்சென்றதாக சுட்டிக்காட்டினார்