ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பயணித்த ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடுமையான பனிமூட்டத்தால் மலைப்பகுதியைக் கடக்கும்போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னிலையில் மீட்புப் படையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்துள்ளனர்.
ஈரானின் எல்லையில் அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் திறப்பு விழாவிற்காக ஈரானிய ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் சென்று மீண்டும் திரும்பும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரானிய ஜனாதிபதி மற்றும் வெளியுறவு அமைச்சர் Hossein Amirabdollahian உள்ளிட்டோரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாக அந்த நாடு தகவல்கள் குறிப்பிடுகின்றன.