200 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
எத்தியோப்பியாவில் இருந்து தோஹா – கட்டார் ஊடாக நாட்டிற்கு வருகதந்த நிலையில் குறித்த பெண் விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 2 கிலோ 851 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
பயணப்பொதியில் மிளகாய்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே போதைப்பொருள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பிலிப்பைன்ஸ் பிரஜையான் 47 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்
சந்தேகநபரான குறித்த பெண் இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புவைத்துள்ள நிலையிலேயே இவ்வாறு கடத்தல் முயற்சியில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது
மேலும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 5 நாட்களுக்கு நாட்டில் உள்ள சுற்றுலா ஹோட்டல்களில் தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது
கைது செய்யப்பட்ட பெண் நீர்க்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.