அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் நகரில் பலத்த சூறாவளி வீசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சுமார் 2,000 பேர் வசிக்கும் கிரீன்ஃபீல்டு வழியாக வீசிய இந்த சக்திவாய்ந்த சூறாவளியால் உள்ளூர் மருத்துவமனை சேதமடைந்துள்ளது,
இதனால், பலர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்தனர்.மேலும் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் நகரத்தில் உள்ள பல பெரிய காற்றாலைகள் இடிந்து விழுந்ததாகவும், ஏராளமான குப்பைகள் அப்பகுதியில் சிதறியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுப்பதற்கு அரசாங்கம் தனது முழு ஆதாரங்களையும் வழங்கும் என்று அம்மாகாணத்தின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.