சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு எதிர்வரும் நவம்பர் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தக உறவுகள், ரஷ்யா – உக்ரைன் போர் மற்றும் அணுவாயுதக் கட்டுப்பாடு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.
மத்திய கிழக்கின் மோதல் நிலைமைகள், சர்வதேச எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் தொடர்பிலும் விவாதங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று வல்லரசுத் தலைவர்களும் ஒரே மாநாட்டில் பங்கேற்கவுள்ளமை சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

















