”வீ எப் எஸ்( VFS) சேவை வரை நாட்டில் ஊழல் இடம்பெற்றுள்ளதை நாட்டு மக்கள் அறிவர்” என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”வீ எப் எஸ் வரை நாட்டில் ஊழல் இடம்பெற்றுள்ளதை இன்று நாட்டு மக்கள் அனைவரும் அறிவர்.
தரமற்ற மருந்து இறக்குமதிக்கு அமைச்சரவை கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு அனுமதி வழங்கியது. அதேபோல் கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் செல்வதற்கு அமைச்சரவையே ஆலோசனை வழங்கியது. அமைசரவையில் அங்கம் வகிக்கும் பலருக்கு பாரிய ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஹரீன் பெர்ணான்டோ இன்று மௌனியாக இருக்கின்றார். வீ எப் எஸ் நிறுவுன அதிகாரிகள் அவரை சந்திக்க வந்தார்கள்.ஹரீன் பெர்ணான்டோ ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவரா அல்லது ஊழல்வாதிகளை காப்பாற்றுபவரா என்று தெரியவில்லை” இவ்வாறு முஜிபுர் ரஹுமான் தெரிவித்துள்ளார்.