”தேர்தலை முடக்குவதற்கு சதிதிட்டங்கள் தீட்டப்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது” என நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”அநுரகுமார ஒன்றையும் லால்காந்த ஒன்றையும் கூறுகின்றனர். மருபுறம் ஹரிணி ஒரு விடயத்தை கூறுகின்றார். தேசிய மக்கள் சக்தியின் உண்மையான பொருளாதார வேலைத்திட்டத்தை அவர்கள் முன்வைக்க வேண்டும்.
பொதுத்தேர்தலாக இருந்தாலும் ஜனாதிபதி தேர்தலாக இருந்தாலும் எந்தவொரு தேர்தலுக்கும் நாம் தயார்.அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் ஒரு சில மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஆனால் தேர்தலை முடக்குவதற்கு சதிதிட்டங்கள் தீட்டப்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தேசிய தேர்தல் நிச்சயமாக நடத்தப்பட வேண்டும் என்பதை நான் ஜனாதிபதிக்கு ஞாபகப்படுத்துகின்றோம்” இவ்வாறு துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.