ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் லங்கா ப்ரீமியர் லீக் அணியொன்றின் முன்னாள் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கு ஒன்றின் மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை காரணமாகவே அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்றையதினம் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட விசாரணைப் பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் Aura Lanka நிறுவனத்தின் தலைவர் வர்த்தகரான விரஞ்சித் தம்புகல என்பவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர், Aura Lanka நிறுவனத்தின் தலைவர் மற்றும் லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) தம்புள்ள அணியின் முன்னாள் உரிமையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.