ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்பினை, இலங்கையில் வழிநடத்தியதாக சந்தேகிக்கப்படுகின்ற ஒஸ்மான் புஷ்பராஜ் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய 4 இலங்கையர்கள் அண்மையில் இந்தியாவில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய நபராக ஒஸ்மான் புஷ்பராஜ் இனங்காணப்பட்டிருந்த நிலையில் கடந்த 25ஆம் திகதி பொலிசார் சந்தேக நபரின் புகைப்படத்தினை வெளியிட்டிருந்தனர்.
சிஐடி மற்றும் ரிஐடியின் கூட்டு நடவடிக்கையில் கொழும்பில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களையும், ஒஸ்மான் புஷ்பராஜ் வழிநடத்தியதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் சந்தேக நபர் கைது செய்யப்பட்ட விதம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 25ஆம் திகதி குறித்த சந்தேக நபரை கைது செய்ய உதவுவோருக்கு 20 இலட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்று பொலிஸார் அறிவித்திருந்தனர்.