இலங்கையில் கடந்த வருடம் மிளகு அறுவடை 30,000 மெற்றிக் டொன்களை தாண்டியதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
மிளகுச் செய்கைக்கான புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டமை, மானியங்களை வழங்குதல் மற்றும் கடந்த வருடத்தின் தொடர் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 2019ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கையில் அதிகளவு மிளகுப் பயிர்ச் செய்கை 2023ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.