ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறை பிடிக்கப்பட்டிருந்தார்.
தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக கடந்த மாதம் 2-வது வாரத்தில் உச்சநீதிமன்றம் அவருக்கு இடைக்கால பிணை வழங்கியது. ஜூன் முதலாம் திகதி வரை இடைக்கால ஜாமின் வழங்கியது. இதனை மேலும் ஒருவாரம் நீட்டிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்தார்.
இது தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. அதன்படி கெஜ்ரிவால் டெல்லி மாநில விசாரணை நீதிமன்றத்தில் இடைக்கால பிணை கேட்டு மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு தொடர்பாக பதில் அளிக்க அமலாக்கத்துறைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்றைய விசாணையின்போது அமலாக்கத்துறை தனது பதிலை தெரிவித்தது. அப்போது இடைக்கால பிணையை நீடிட்டிக்க ஆட்சேபனை தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை ஜூன் 7ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதனால் அரவிந்த கெஜ்ரிவால் நாளை மீண்டும் திகார் சிறைக்கு செல்வது உறுதியாகிவிட்டது. இடைக்கால ஜாமின் தொடர்பாக ஜூன் 5 ஆம் திகதி முடிவு செய்யப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாளை மதியம் 2 மணிக்கு திகார் ஜெயில் செல்வேன் என கெஜ்ரிவால் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.