இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் காலை 08.05 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 7 இடங்களில் முன்னணியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவுகள் கடந்த 6 வாரங்களில், 7 கட்டங்களாக இடம்பெற்றன.
இதற்கமைய உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 18ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகின.
தற்போதைய ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியே 3ஆவது முறையாகவும் அரசாங்கத்தை அமைக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மொத்தமாகவுள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் ஏற்கனவே போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மீதமாகவுள்ள 542 தொகுதிகளுக்கான முடிவுகள் இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளன.