அநுராதபுரம் மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 15 பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் மாவட்ட சபை உறுப்பினர் ரோஹன பண்டார கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாணவர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லாத காரணத்தினால் இந்த பாடசாலைகள் மூடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மூடப்பட்ட பாடசாலைகளில் சில பிரதேச செயலகங்கள் மற்றும் மாணவர் படை போன்ற அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இப்பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் முன்பள்ளிகளுக்கு சில வகுப்பறைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.