நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 7 மணிக்கு செல்வுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதியிலும் பா.ஜ.க முன்னிலை வகிக்கின்றது.
இருப்பினும் உத்தர பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில், பாஜ.க கூட்டணியை விட, இந்தியா கூட்டணி கட்சிகள் முன்னிலை வகிக்கின்றது.
அத்துடன், பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், தேசிய ஜனநாயக கூட்டணி 296 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இதனால், அடுத்த கட்ட நடவடிக்கைகாக பிரதமர் நரேந்திர மோடி கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு இன்றிரவு 7 மணிக்கு செல்லவுள்ளார்.
அங்கு ஆட்சி அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனைிடையே இந்தியா கூட்டணி 230-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.