பாராளுமன்ற தேர்தலில் 3வது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றுள்ளார்.
பிரதமர் மோடி 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில் பெற்றுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 24 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் 6,12,970 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 4,60,457 வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.