நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, முல்லைத்தீவில் வசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல பகுதிகளிலும் இருந்து மக்கள், இந்தியாவில் தொடர்ச்சியாக தஞ்சமடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், முல்லைத் தீவிலிருந்தும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர், தமிழ் நாட்டின் இராமேஸ்வரத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
இவர்களில் சிறுவனும் சிறுமியும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரை பகுதியில் தஞ்சம் அடைந்த இவர்களை மீட்டுள்ள, மரைன் பொலிஸார், இவர்களிடம் விசாரணை மேற்கொண்டதையடுத்து, மண்டபம் அகதி முகாமிற்கு இவர்களை அனுப்பி வைத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.















