தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகளை ஆய்வு செய்வதற்காக பிரித்தானியாவைச் சேர்ந்த விசேட நிபுணர் ரிச்சர்ட் தோம்சன் உள்ளிட்ட குழுவினர் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்திற்கு உள்ளாகி கடலில் மூழ்கியதன் பின்னர் கரையொதுங்கிய பிளாஸ்டிக் கழிவுகள், புத்தளம், வத்தளை பிரதேசங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த பிளாஸ்டிக் கழிவுகளை ஆய்வு செய்வதற்காக நிபுணர் ரிச்சர்ட் தோம்சன் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
இதேவேளை அவருக்கு உதவும் வகையில் அவுஸ்திரேலியாவின் சட்டத்தரணி மிச்செல் டெய்லரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகள் ஊடாக நாட்டின் கரையோர வளங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான ஆய்வு அறிக்கையை பேராசிரியர் ரிச்சர்ட் தோம்சன் இதன்போது தயாரிக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அவர் இதற்கு முன்னரும் நாட்டுக்கு வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.