இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து 3ஆவது முறையாகவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
இதன்போது பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணமும் இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
புதுடில்லி ராஷ்டிரபதி பவனில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மோடி மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். பிரதமருடன் 30 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாலைதீவு ஜனாதிபதி முகம்மது முயிஸ்,சீஷெல்ஸ் துணை ஜனாதிபதி அஹமது அபிப், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவின் குமார் ஜெகநாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரீங் டோப்கே ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.