இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு கோரி இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனை சாலை ஊழியர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 11ஆம் திகதி அம்பாறை கல்முனை ஒருங்கிணைந்த சேவையில் ஈடுபடுகின்ற இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும் மற்றும் தனியார் பேரூந்து ஊழியர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து இரு தரப்பிலும் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தனர்.
இந்நிலையில் கல்முனை தலைமையக பொலிஸாரினால் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இப் போராட்டத்தினால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். அத்துடன் போதிய பேரூந்துகள் இல்லாத காரணத்தினால் சில பாடசாலை மாணவர்கள் நீண்ட நேரம் பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது.