தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரனை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பு நல்லூர் கோவில் வீதியில் உள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சஜித் பிரேமதாச அங்கு பல்வேறு நிகழ்வுகளிலும் சந்திப்புக்களிலும் பங்குபற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.