நிபந்தனையின்றியே சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது தவணை கடன் கொடுப்பனவிற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
IMF இன் இலங்கைக்கான மூன்றாம் தவணை கடன் கொடுப்பனவு குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிதிராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது” 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட பணியாளர் மட்ட இணக்கப்பட்டின்அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது தவணை கொடுப்பனவிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இணக்கப்பாட்டிற்கு வருமாறு கடன்வழங்குனர்கள் எமக்கு அழுத்தம் பிரயோகிக்கவில்லை. அதேபோல் சர்வதேச நாணய நிதியம் அதற்கு இடமளிக்கவும் இல்லை.
எந்தவொரு நிபந்தனையும் இன்றியே சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது தவணை கொடுப்பனவிற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
2023 டிசம்பர் மாதமளவில் சமூக செலவுகள் தவிர்ந்த ஏனைய இலக்குகளை போதுமான அளவில் பூர்த்தி செய்ய எம்மால் முடிந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது கடன் தவணைக்கு அமைய இலங்கைக்கு 336 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கப்பெறவுள்ளது” இவ்வாறு ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.