கடந்த காலத்தை பற்றி யோசிப்பத்தை நிறுத்தினால் மனம் அமைதியாகி விடும் என்று இயக்குனர் செல்வராகவன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
சமூக வலைதளங்களிலும் எக்டிவ்வாக இருக்கும் செல்வராகவன் இவரது வாழ்க்கை தத்துவம் தொடர்பான பதிவுகள் வரவேற்பை பெற்றுள்ளன. இன்ஸ்டாகிராமில் செல்வராகவனை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் செல்வராகவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது- கடந்த காலத்தை பற்றி நினைத்துக் கொண்டிருப்பதுதான் நாம் நிம்மதியை இழப்பதற்கு முக்கிய காரணம். கடந்த கால நினைவுகள் நமது சந்தோஷத்தை பறிக்கும்.
கடந்த காலத்தை பற்றி யோசிப்பதை நிறுத்தி விட்டால் நம்முடைய மனது முழு அமைதியாகி விடும். வாழ்க்கையில் பெரும்பான்மையான நேரங்களை நாம் முன்பு நடந்ததை நினைப்பதிலேயே வீணாக்கி விடுகிறோம்.
கடந்த கால நினைவுகளில் இருந்து வெளியே வர ஒரு ஆலோசனை சொல்கிறேன். எப்போதெல்லாம் உங்களுக்கு கடந்த கால நினைவுகள் வருகிறதோ, அப்போதெல்லாம், இப்போது, இப்போது என்ற எண்ணத்தை ஆழமாக நினைத்துக் கொள்ளுங்கள்.
இது உங்கள் வாழ்க்கையில் நிகழ் காலத்தில் என்ன நடக்கிறது என்பதில் கவனம் செலுத்த வைக்கும். தொடக்கத்தில் இது கொஞ்சம் கடினமாக இருந்தாலும் போகப் போக நடைமுறைக்கு வந்து விடும். இதை தொடர்ந்து நீங்கள் செய்யும்போது நிம்மதியான வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.