யோகா பயிற்சிகளை ஊக்குவித்து யோகா தினத்தை கொண்டாட இலங்கை ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச யோகா தினம், உலகளாவிய கலாச்சார நாட்காட்டியில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதாக இந்தியப் பிரதமர் தெரிவித்தார்
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முன்மொழிவாக தொடங்கிய இந்த யோகா தினம், இந்த பத்தாண்டுகளில் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் உலகளாவிய இயக்கமாக வளர்ந்துள்ளது என்றும் நரேந்திர மோடி ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பண்டைய இந்திய பாரம்பரியமான யோகாவை இன்று உலகின் அனைத்து கலாச்சாரங்கள் மற்றும் கண்டங்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இந்திய பிரதமர் கூறினார்.
அத்துடன் இலங்கை மக்கள் மத்தியில் யோகாவை ஊக்குவிப்பதுடன், இந்த வருடமும் சர்வதேச யோகா தின விழாவை சிறப்பாக நடத்துவதற்கு கௌரவமான ஆதரவை எதிர்பார்ப்பதாக இந்தியப் பிரதமர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.