ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி புதிய மாவட்ட செயலக கட்டிட தொகுதியை திறந்துவைக்கவுள்ளதுடன் இரு தினங்கள் மட்டக்களப்பில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் வருகை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் உயர் அதிகாரிகள், ஜனாதிபதி செயலக அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் என பலர் பங்கேற்றிருந்தனர்.இன்றும், நாளையும் மட்டக்களப்பில் தங்கவுள்ள ஜனாதிபதி விவசாயத்தினை விரிவாக்கம் செய்தல், அபிவிருத்தி செய்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்கள் மற்றும் கள விஜயத்தினையும் மேற்கொள்ளவுள்ளார்.
அதேபோன்று ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதுடன் உறுமய காணி உறுதிப்படுத்திரங்கள் வழங்கும் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன் இளைஞர் யுவதிகளையும் சந்தித்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.