நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கம் நீடித்து வரும் நிலையில், மாா்ச் 1 முதல் ஜூன் 20 வரையிலான காலகட்டத்தில் ‘வெப்பவாதம்’ காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 143-ஆக உயா்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், வெப்பவாதத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதுதொடா்பான முழுமையாக தகவல்களை மாநிலங்கள் வழங்காததால் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தால் வெளியிடப்படும் அறிக்கையில் அதிகாரபூா்வ உயிரிழப்புகள் குறித்த இறுதி தகவல்கள் வெளியாகவில்லை. அதேபோல் சில சுகாதார மையங்களும் வெப்பவாதத்தால் உயிரிழந்தோா் குறித்த எண்ணிக்கையை முழுமையாக வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பவாதத்தால் ஜூன் 20ஆம் திகதி மட்டுமே 14 போ் உயிரிழந்ததாக அதிகாரப்பூா்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 9 போ் இதே காரணத்தால் உயிரிழந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும் நிலையில் மாா்ச் 1 முதல் ஜூன் 20 வரையிலான காலகட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 114இல் இருந்து 143ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 35 பேரும் டெல்லியில் 21 பேரும் பீகாா் மற்றும் ராஜஸ்தானில் தலா 17 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், வெப்பவாதத்தால் 41,000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனர் என இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன.