விண்வெளி வீராங்கனை சுனித்தா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது மீண்டும் தாமதமடைந்துள்ளது.
சுனித்தா வில்லியம்ஸ் விண்வெளிக்கு பயணித்த பொயிங் ஸ்டார் லைனர் (boeing starliner) விண்வெளி ஓடம் தொடர்ச்சியான தொழில்நுட்ப கோளாரினால் பாதிக்கப்பட்டுள்ளதனால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இம்மாதம் 05 ஆம் திகதி விண்வெளிக்கு பயணித்திருந்த சுனித்தா வில்லியம்ஸ் 14 ஆம் திகதி பூமிக்கு மீள திரும்பவதற்கு திட்டமிடப்படப்பட்டிருந்தது.
எனினும் அவர் பயணித்த boeing starliner தொழில்நுட்ப கோளாரினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரால் உரிய திகதியில் பூமிக்கு திரும்பமுடியாமல் போனது.
இந்நிலையில், நேற்றையதினம் (26) அவரால் பூமிக்கு திரும்ப முடியும் என திகதி குறிப்பிடப்பட்டிதபோதிலும், அவரது விண்வெளி ஓடம் பயணிக்க முடியாமற்போனமையினால், அவரால் நேற்றும் பூமிக்கு திரும்ப முடியாமற்போனது.
இந்த நிலையில், சுனித்தா வில்லியம்ஸ் மீண்டும் பூமிக்கு திரும்பும் திகதியை நாசா வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.