”சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்கள் உட்பட சர்வதேச வணிக்கடன் தரப்புகளுடன் அரசாங்கம் இதுவரை எந்த நிலையான இணக்கப்பாடுகளையும் எட்டவில்லை” என ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே ஹர்ஷ டி சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதியின் உரையை நாம் முழமையாகச் செவிமடுத்தோம்.
ஐக்கிய மக்கள் சக்தி எல்லா விடயங்களுக்கும் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. உரையை எழுதிக் கொடுத்தவர் யார் என்று தெரியவில்லை. சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு ஆரம்பத்தில் இருந்து கூறி வந்தோம்.
இந்த நாட்டின் சரியான தாய், யார் என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்வர்.
ஐக்கிய மக்கள் சக்தி அசடு போல் தான் இதுவரை செயற்பட்டுள்ளதாம். நாம் எவ்வாறு செயற்பட்டோம் என்பதை ஜனாதிபதி கூறும் முன்னர் ஒருமுறை சிந்தித்து பார்த்திருக்க வேண்டும். ஆம் சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு நாமே ஆரம்பத்தில் கூறினோம். 2020 இல் நாடாளுமன்றத்திற்கு வந்த முதல் நாளே இதை நாம் கூறினோம்.
சர்வதேச நாணய நிதியத்துடன் நாடு இணக்கப்பாடு கண்டதற்கு நாம் எதிராக வாக்களிக்கவில்லை.
பேச்சை எழுதியவர் இதனை அறிந்திருக்கவில்லை போல் தெரிகின்றது. பிரதான இரு தரப்பு உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களான சீன, ஜப்பன் இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகளுடன் அதன் உத்தியோகபூர்வ கடன் தாரர்களுடன் இணக்கப்பாட்டை எட்டியதற்கு மகிழ்ச்சியடைகிறோம்.
நல்லதொன்று நடக்குமாக இருந்தால் நாம் அங்கும் இங்கும் இலங்கைத் தாயை இழுக்க விரும்பவில்லை.
இலங்கை தாயின் கை கால்களை உடைக்க நாம் தயாரில்லை. நாம் மக்களுக்கான எதிர்க்கட்சியாகும்.
ஜப்பானுடன் இணக்கப்பாட்டை எட்டியதற்கு இன்று கைதட்டுகின்றனர். இவர்களே ஜப்பானுக்கு அன்று கன்னத்தில் அறைந்து நாட்டை விட்டு விரட்டினர்.
செஹான் சேமசிங்க, அலிசப்ரி போன்றவர்ளின் அரசாங்கமே ஜப்பானை போ என்று கூறி விரட்டியது.
இவர்களே ஆரம்பத்தில் இதனை எதிர்த்தனர். இணக்கப்பாடு எட்டிய விடயங்களை நடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளனர்.இதற்கு ஆதரவு வழங்குமாறு கோரியுள்ளனர். அதன் உள்ளடக்கம் குறித்து அறிய வேண்டியுள்ளது.
2028 வரை கடன் தவணைகளை செலுத்த வேண்டிய தேவை இல்லை என தெரிவித்திருந்தார். கடன் தவணைகளை காலம் தாழ்த்தும் போது வட்டி செலுத்த வேண்டுமா? இல்லையா? அதன் பிற்பாடு வட்டி விகிதம் என்ன?
இது தொடர்பான விடயங்களை அறிய விரும்புகிறோம்.
சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்கள் உட்பட சர்வதேச வணிக்கடன் தரப்பினரோடு இதுவரை எந்த நிலையான இணக்கப்பாடுகளையும் அரசாங்கம் எட்டவில்லை” இவ்வாறு ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.