அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையேயான முதல்நாள் விவாதம் நிறைவடைந்துள்ளது.
ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் நேருக்கு நேர் சந்தித்து விவாதித்தனர்.
இந்த விவாதத்தில் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக்கொண்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது.
ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரம் மற்றும் கருக்கலைப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டிருந்தன.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பொருளாதார பிரச்சனையை மையமாக கொண்டு இந்த விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தின்போது தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு ஜோ பைடனும், டொனால்ட் ட்ரம்பும் வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டனர். தங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? என்பது குறித்தும் விளக்கமளித்தனர்.
இதில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க பொருளாதாரம் மற்றும் அவரது வெளியுறவுக் கொள்கை பதிவுக்காக ஜோ பைடனை பலமுறை தாக்கி விவாதித்துள்ளார்.
மொத்தம் 90 நிமிடம் விவாதம் நடத்தப்பட்ட இந்த விவாதத்தில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட பல விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.