இந்தியாவின் டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் முதல் முனையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 6 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
இன்று காலை பெய்த பலத்த மழை மற்றும் காற்றின் காரணமாக கட்டிடத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததுள்ளதுடன் பல தனியார் வாகனங்களும் சேதமடைந்துள்ளன
இந்த சம்பவத்தையடுத்து, விமான நிலைய முதல் முனையத்தில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன்
பாதிக்கப்பட்டவர்கள் வேறு யாராவது இருக்கிறார்களா என்பதை கண்டறியும் பணியை நிவாரண குழுக்கள் ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.