இலங்கையில் கோழி இறைச்சியின் அதிகூடிய உற்பத்தி இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் பதிவாகியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இது கடந்த காலங்களில் வருடம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்ட கோழி இறைச்சி உற்பத்தி அளவை விட அதிகமாகும்.
இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் 269 மில்லியன் கிலோகிராம் கோழி இறைச்சி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டுகளில், ஆண்டு முழுவதும் சராசரியாக சுமார் 220 முதல் 230 மில்லியன் கிலோ கோழி இறைச்சியே உற்பத்தி செய்யப்பட்டது.
இந்த வருட இறுதிக்குள் கோழி இறைச்சி உற்பத்தி மேலும் சாதனை படைக்கும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலைமையால் கோழி இறைச்சியின் விலை வேகமாகக் குறையும் சாத்தியம் காணப்படுவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.