மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து பெண் ஒருவரது சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த சேருவில, தங்கநகர் பகுதியைச் சேர்ந்த நடேஸ்குமார் வினோதினி என்ற 25 வயதான பெண்ணின் சடலமே கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த இளம் பெண் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினரால் மூதூர் பொலிஸ் நிலையத்தில் முதலாம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பாக சந்தேகத்தின்பேரில் கிளிவெட்டியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரிடம், பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் கிளிவெட்டி கிராமத்தின் எல்லைப் புறத்தில் பாழடைந்த கிணற்றிலிருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞனும், உயிரிழந்துள்ள யுவதியும் காதலித்து வந்ததாகவும், கடந்த மே மாதம் குறித்த யுவதி காதலனுடன் மட்டக்களப்பிற்கு சென்று வசித்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். எவ்வாறிருப்பினும் , குறித்த பெண்ணின் காதலன் தலைமறைவாகியுள்ளமை பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.