ஹம்பாந்தோட்டை பத்தேவெல பிரதேசத்தில் இருந்து பண்டாரவளை நோக்கிச் பயணித்திருந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
பதுளை, எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் இந்த விபத்துச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றிருந்தது.
ஹல்பே வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியது.
பேருந்தி 18 பேர் பயணித்திருந்ததுடன் 9 பேர் காணமடைந்த நிலையில் தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் 04 பெண்களும் 05 ஆண்களும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பேருந்தில் பயணித்திருந்த ஏனையோர் காயமின்றி தப்பியதாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தில் கோட்டலின் சுற்றுமதில் ஒன்றும் பாரிய சேதமடைந்துள்ளது. சம்பம் தொடர்பான சிசிரிவி காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
பேருந்தில் பயணித்திருந்த பொலிஸ் உத்தியோகத்தரும் சிறு காணங்களுக்கு உள்ளாகியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.