காசா மீது, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் ஐந்து பலஸ்தீன ஊடகவியலாளர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த ஐந்து ஊடகவியலாளர்களின் பெயர்களையும் காசா அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, காசா வைத்தியசாலைகளில் நிலவி வரும் எரிபொருள் நெருக்கடியினால், வைத்தியசாலைகளில் பல துறைகளின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்கம் தெரிவித்துள்ளது.
மேலும், ஜூன் 27 ஆம் திகதி வெளியிடப்பட்ட இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை மற்றும் வெளியேற்ற உத்தரவைத் தொடர்ந்து,
கிழக்கு காசா நகரத்திலிருந்து சுமார் 80 ஆயிரம் பேர் வரை இடம்பெயர்ந்துள்ளதாக மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த 48 மணித்தியாலங்களில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 87 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசா அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.