இராட்சத அளவிலான விண்கல் ஒன்று 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி பூமியைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் இது மனித குலத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தலாம் எனவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
உலக விண்கல் தினத்தன்று நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறுத் தெரிவித்தள்ளார்.
அபோபிஸ் [Apophis] என்ற இராட்சத அளவிலான விண்கல் ஒன்று 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி பூமியைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும் அது 2036 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, 370 மீட்டர் விட்டம் கொண்ட இந்த விண்கல் பூமிக்கும் மனித குலத்துக்கும் அதிக ஆபத்தை ஏற்படுத்தலாம் எனவும் வரலாற்றில் பலமுறை இதுபோன்ற சமபவங்கள் நடந்துள்ளதால் இந்த பேராபத்து ஏற்படாது என எந்த உத்தரவாதமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகத்தில் மனித குளம் என்றென்றும் வாழவேண்டும் என்பதே நமது விருப்பம் என்றாலும் நடக்க உள்ளதை நம்மால் தடுக்க முடியாது எனவும் அசம்பாவிதங்களுக்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதால் நாம் தயாராக இருக்க வேண்டும் எனவும் இந்தியாவின் இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
பூமிக்கு அருகில் வரும் ஆபத்தை நம்மால் சில சமயங்களில் மட்டுமே கணிக்க முடிகின்றதாகவும் ஆபத்துகளை கண்டறிய நாம் இன்னும் தொழிநுட்பத்தை முன்னேற்றியாக வேண்டும் எனவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தலைவர் சோம்நாத் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத விண்கலம் ஒன்று பூமியை நோக்கி நகர்வதாகவும் இன்னும் 14 வருடகங்களில் துல்லியமாக 2038 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் திகதி பூமியை தாக்கி அதிக சேதங்களை ஏற்படுத்த 72 சதவீதம் வாய்ப்புள்ளதாக அமரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.