இந்தியா, பிரித்தானியா, சீனா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த மாதத்தின் முதல் 4 நாட்களில் மாத்திரம் 21,298 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் இந்தியாவிலிருந்து 5,245 பேரும், பிரித்தானியாவிலிருந்து 1,741 பேரும், சீனாவிலிருந்து 1,422 பேரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 10 இலட்சத்து 31 ஆயிரத்து 547 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.