ஜம்மு காஷ்மீரில் இராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த சம்பவத்தில் இரண்டு இராணுவ வீரர்கள் வீர மரணமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
காஷ்மீரில் குல்காம் மாவட்டம் மாடர்கம் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து விரைந்து செயற்பட்டு குறித்த கிராமத்தில், பொலிசார், இராணுவ வீரர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தியதாக குறிப்பிடப்படுகின்றது.
இதனை எதிர்பாராத பாதுகாப்பு படையினர், சுதாரித்துக்கொண்டு பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் பரபரஸ்பர துப்பாக்கிச் சண்டை நிலவியது.
இதில், 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன், 2 இராணுவ வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர்.
மேலும் 4 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும், அவர்களை தேடும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிசார் ஈடுபட்டுள்ளனர். இதன்போது மேலும் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.