தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மறைந்த இரா. சம்பந்தனின் இறுதிக்கிரியைகளில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அன்னாரின் பூதவுடல், மக்களின் அஞ்சலிக்காக திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கபட்டுள்ளது.
அவரின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க இன்று மாலை திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ளார்.
மேலும் அன்னாரின் பூதவுடலுக்கு அரசியல்வாதிகள், பிரமுகர்கள் மற்றும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.