சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டிக்கொண்டே செல்லும் சூப்பர் அப்டேட்களை தந்த வண்ணம் இருக்கின்றது.
3D தொழில் நுட்பத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொடைக்கானல், ராஜமுந்திரி ஆகிய பகுதிகளில் அடர்ந்த காட்டுப்பகுதியில் நடத்தப்பட்டது. சூர்யாவின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக உருவாகும் இந்த கங்குவா படமானது பத்துக்கும் அதிகமான மொழிகளில் வெளியாக இருக்கிறது.
அதன்படி சமீபத்தில் இந்த படமானது 2024 அக்டோபர் 10இல் வெளியாகும் என்று பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
இதற்கிடையில் இந்த படத்தின் முன்னோட்ட வீடியோவும் டீசரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்நிலையில் வருகின்ற ஜூலை 23 சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கங்குவா படத்தின் டிரைலர் வெளியாகும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. அதற்காக ட்ரைலர் வேலைகளையும் படக்குழு ஆரம்பித்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.