இரண்டு நாட்கள் ரஷ்யப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து ஆஸ்திரியா சென்றுள்ளார்.
அதன்படி ஆஸ்திரியாவைச் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு விமான நிலையத்தில் வைத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெகம்மரை சந்தித்த இந்திய பிரதமர் மோடி பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.