காசாவில் மக்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலை மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான் வழித் தாக்குதலில் 29 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசாவின் அப்சான் பகுதியில் உள்ள அல் – அவ்டா பாடசாலையைக் குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் இந்தத் தாக்குதலை நேற்று நடத்தியுள்ளது.
இந்நிலையில் தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும், இத் தாக்குதலின் போது சுமார் 2,000 பேர் பாடசாலையில் தங்கியிருந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் கடந்த 4 நாட்களில் 4 பாடசாலைகள் மீது இவ்வாறு இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்தத் தாக்குதலை மோசமான கொலை எனத் தெரிவித்துள்ள பாலஸ்தீன ஊடகம், உயிரிழந்த 29 பேரில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.