ஈரான் நாட்டில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதுடன் இதனை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் தலைநகர் தெக்ரானில் உள்ள துருக்கி ஏர்லைன்ஸ் விமான நிறுவன அலுவலகத்தில் பணியாற்றும் ஈரான் நாட்டை சேர்ந்த பெண்கள் ஹிஜாப் அணியாமல் பணி செய்வதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதனால் அப்போது பெண் ஊழியர்கள் ஹிஜாப் அணியாமல் இருப்பது தெரியவந்ததையடுத்து துருக்கி விமான நிறுவன அலுவலகத்தை ஈரான் அரசு சீல் வைத்து மூடியுள்ளது.
துருக்கி ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்கு பொலிஸார் ஹிஜாபைக் கடைப்பிடிக்காதது குறித்து முதலில் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் ஊழியர்கள் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் அந்த அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது என்று சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.