ஏர் கேரளா விமான நிறுவனம் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்றுள்ளது. 2025-ம் ஆண்டில் உள்நாட்டு சேவைகளை ஏர் கேரளா தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கேரளாவுக்கு சொந்தமான முதல் விமான நிறுவனமாக ஏர் கேரளா உருவெடுத்துள்ளது.
கேரளாவை பூர்வீகமாக கொண்டு வளைகுடா நாடுகளில் தொழில் செய்து வரும் தொழிலதிபர்களான அஃபி அகமது மற்றும் அயூப் கல்லடா இருவரும் இந்த திட்டத்தை தொடங்க ஆர்வம் காட்டினர்.
கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு ஏர் கேரளா விமான நிறுவனத்தை உருவாக்கினார். ஏர் கேரளா, இந்தியாவின் தென்கோடி மாநிலத்தின் முதல் பிராந்திய விமான சேவையாகும்.
ஏர் கேரளா செயல்பாடுகளை தொடங்க விமானங்களை வாங்க வேண்டும் என்பதுடன், ஏர் ஆபரேட்டர் சான்றிதழை பெறுவதற்கான ஒழுங்குமுறை தேவைகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அயூப் கல்லடா தெரிவிக்கையில், இது ஒரு முக்கியமான கட்டமாகும், இது விமான போக்குவரத்து அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு தரங்களையும் நாங்கள் பூர்த்தி செய்வதை உறுதிசெய்கிறோம் என தெரிவித்துள்ளார்.