பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து புகையிர நிலைய அதிபர்கள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானித்ததாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்த நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் தமது பணியை கைவிட்டதாக ரயில்வேயின் பதில் பொது முகாமையாளர் எஸ்.எஸ்.முதலிகே தெரிவித்த கருத்துக்கு எதிராக தொழிற்சங்கத்தின் நிறைவேற்று சபை பணிப்புறக்கணிப்பை தொடர தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
இதேவேளை புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னதாக அந்தந்த புகையிரத நிலையத்திலோ அல்லது அருகில் உள்ள புகையிரத நிலையத்திலோ கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்யாத அனைத்து நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் சேவையை விட்டு விலகியவர்களாக கருதப்படுவார்கள் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னிலையிலே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் பணிப்புறக்கணிப்பு 90 வீதத்திற்கும் மேலாக வெற்றியடைந்துள்ளதாக தெரிவித்த அவர் இன்று காலை சுமார் 12 புகையிரதங்களை இயங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.