”விசேட வேலைத்திட்டத்தின் கீழ் வாகன இறக்குமதி விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக” நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” விசேட வேலைத்திட்டத்தின் கீழ் வாகன இறக்குமதியை ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம்.
வாகன இறக்குமதி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் மாதத்திற்கு பின்னர் பொதுப் போக்குவரத்து சேவைகள், ஏனைய போக்குவரத்து சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் சாதாரண மற்றும் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம்.
அந்தவகையில் வாகன இறக்குமதி தொடர்பான அறிக்கையானது ஓகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்திற்குள் சமர்ப்பிக்கப்படும்.
இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ஆரம்பத்தில் இருந்து பொதுப்போக்குவரத்திற்கான வாகன இறக்குமதி ஆரம்பிக்கப்படும்.
நடைமுறை சிக்கல் ஏறபடாத வகையிலேயே வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும்” இவ்வாறு ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.