“அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஓர் போராளி எனவும், டொனால்ட் ட்ரம்ப் ஓர் சர்வாதிகாரி” எனவும் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் விமர்சித்துள்ளார்.
அண்மையில் லாஸ்வேகாசில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கமலாஹாரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலானது நமது வாழ்நாளின் மிக முக்கியமான தேர்தலாகும்.
அமெரிக்க ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியிடுவது என்பது எளிதானது அல்ல. எமது ஜனாதிபதி ஜோபைடன் ஒரு போராளி. ஆனால் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஓர் சர்வாதிகாரியாவார். அவர் அமெரிக்க ஜனநாயகத்தையும் சர்வாதிகார நாடாக மாற்றி விடுவார்.
அவர் இம்முறை மீண்டும் ஜனாதபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், அவர் ஒவ்வொரு மாநிலத்திலும் கருக்கலைப்பை தடை செய்யும் தேசிய கருக்கலைப்பு தடையில் கையெழுத்திடுவார்.
அத்துடன் அவர் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் சமூக பாதுகாப்பு குறைவடையும்”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோபைடனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப்பும் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.