நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு, உண்மையான தொழிற்சங்க உரிமைகளுக்காக அன்றி, அரசியல் தேவைகளுக்காகவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” புகையிரத பணிப்பகஷ்கரிப்பு தொடர்பான தீர்வுகளை வழங்குவதில் தற்போது ஈடுபட்டுள்ளோம். 5 வருடங்களுக்கு ஒருமுறை நிலைய அதிபர்களின் பதவி உயர்வுக்கு தேவையான அனுமதியை அரச சேவை ஆணைக்குழு ஏற்கனவே வழங்கியுள்ளது.
அதற்கான அமைச்சரவையின் அனுமதியைப் பெறுவதற்குத் தேவையான அமைச்சரவைப் பத்திரம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டும்.
ஆனால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகஷ்கரிப்பு வெறும் அரசியல் நோக்கத்திற்காகவே என்பது தற்போது மக்களுக்கு தெளிவாகியுள்ளது. வேலைநிறுத்தங்கள் உண்மையான தொழிசங்க உரிமைகளுக்காக நடத்தப்படவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்” இவ்வாறு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.