பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் Pakistan Terheek-e-Insaf (தெஹ்ரீக்-ஈ-இன்சாஃப்) கட்சியைத் தடை செய்ய பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இம்ரான் கானினால் கடந்த 1996 ஆம் ஆண்டு தெஹ்ரீக்-ஈ-இன்சாஃப்) கட்சி ஸ்தாபிக்கப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல்முறையாக இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட நிலையில், 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இம்ரான் கான், தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். இதற்கிடையே, கடந்த பெப்ரவரி 8 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் இம்ரான்கானையும் அவரது தலைமையிலான கட்சியையும் தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்தது.
எனினும், தெஹ்ரீக்-ஈ-இன்சாஃப் கட்சி வேட்பாளர்கள் சுயேச்சையாகப் போட்டியிட்டு அதிகபட்சமாக 93 இடங்களில் வெற்றி பெற்றனர்.
இந்த நிலையிலேயே இந்தக் கட்சியை தடை செய்ய பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.