மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்நாட்டில் 20.3% வீதமான குடும்பங்களுக்கு அடிப்படைக் குடிநீர் வசதிகள் இல்லை எனத் தெரியவந்துள்ளது.
இந்த நாட்டில் உள்ள உள்நாட்டு சனத்தொகையில் 16.1% பேருக்கு பாதுகாப்பற்ற கிணறுகளே முக்கிய குடிநீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இலங்கை மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொடர்பாக மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நடத்திய ஆய்வின்படி, உள்நாட்டு சனத்தொகையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் வளாகங்களில் பாதுகாப்பான குடிநீர் சேவையைப் பெற முடியும் என தெரியவந்துள்ளது.
நகர்ப்புற மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்களும், கிராமப்புற மக்களில் நான்கில் ஒரு பகுதியினரும் பாதுகாப்பான குடிநீரைப் பயன்படுத்துவதாகவும், எஸ்டேட் மக்களில் 3.1% மட்டுமே பாதுகாப்பான குடிநீரைப் பயன்படுத்துவதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த நாட்டில் உள்ள உள்நாட்டு மக்கள் தொகையில் 70% க்கும் அதிகமானோர் தங்கள் வளாகங்களில் மேம்படுத்தப்பட்ட குடிநீரைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் 84.9 வீதமான குடும்ப மக்கள் நீர் மூடிய கழிவறைகளையே பயன்படுத்துவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் மேலும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.














